×

ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் மலேசியா தப்ப முயன்ற குற்றவாளி சிக்கினார்

சென்னை, மே 10: சென்னையை சேர்ந்தவர் குமார் முகமது கலித் (29). இவர் மீது, ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கடத்தல், பதுக்குதல் உள்ளிட்ட வழக்குகள், சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசில் நிலுவையில் இருக்கிறது. எனவே சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசார், குமார் முகமது கலித்தை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக தேடி வந்தனர். ஆனால் இவர் கடந்த 3 மாதங்களாக, போலீசில் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் விதத்தில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் மலேசியா நாட்டிற்கு தப்பி செல்வதற்காக, குமார் முகமது கலித் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, இவர் சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என தெரிய வந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், குமார் முகமது கலித் பயணத்தை ரத்து செய்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்துவிட்டு, சிவில் சப்ளை குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசார் நேற்று விமான நிலைய காவல் நிலையத்திற்கு வந்து, குமார் முகமது கலித்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் மலேசியா தப்ப முயன்ற குற்றவாளி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Chennai ,Kumar Mohammad Khalid ,Civil Supply Crime Branch ,CIT Police ,
× RELATED போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார்...